ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில், முன்னணி பயிற்சி மத்திய நிலையமொன்றும் அமைக்கப்பட உள்ளது.
மத்தள வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் உலகின் முன்னணி வானூர்தி சேவை மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் வானூர்தி சேவைப் பயிற்சி நிலையமொன்றையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.