உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.
இந்த விசேட கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.