யாழ் தொடரூந்து சேவைகள் மட்டு

361 0

இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்கு வடக்கு தொடரூந்து பாதையில் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு தொடரூந்து பாதையில் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் அமைந்துள்ள பாலத்தினை மீள் திருத்துவதன் காரணமாக இவ்வாறு சேவைகள் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரையில் மாத்திரமே தொடரூந்து சேவைகள் இடம்பெறும்.

இந்த நிலையில் பொதுமக்களின் நலனுக்காக நாவற்குழிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment