நைஜீரியாவில் நடந்த வான்தாக்குதலில் போகோஹரம் தலைவன் படுகாயம்

328 0

201608240802342761_Nigeria-Claims-Boko-Haram-Leader-Fatally-Wounded-in-Air-Raid_SECVPFநைஜீரியாவில் நடந்த வான் தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் ஷேகாவ் படுகாயம் அடைந்தார். அவரது தளபதிகள் 3 பேர் பலியாகினர்.

நைஜீரியாவில் நடந்த வான் தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் ஷேகாவ் படுகாயம் அடைந்தார். அவரது தளபதிகள் 3 பேர் பலியாகினர்.

நைஜீரியாவில் போகோஹரம் என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்துடன் அந்த இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களிலும், ஆள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை சமாளிக்க முடியாமல் அந்த நாட்டின் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் ஷேகாவ் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவரது தளபதிகள் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பற்றி அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் சானி உஸ்மான் கூறியதாவது:-

ராணுவம் நேற்று (நேற்று முன்தினம்) வான்தாக்குதல்கள் நடத்தியது. இந்த வான்தாக்குதல்களில் அபுபக்கர் ஷேகாவ் சிக்கி படுகாயம் அடைந்தார்.

போகோஹரம் இயக்க தளபதிகள் அபுபக்கர் முபி, மாலம் நுஹூ, மாலம் ஹம்மான் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

அபுபக்கர் ஷேகாவ் கொல்லப்பட்டு விட்டதாக நைஜீரியாவால் பல முறை அறிவிக்கப்பட்டவர், அத்தனை முறையும் தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நைஜீரியா அதிபர் முகமது புகாரியுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு, ஊழல் பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க ராணுவ மந்திரி ஜான் கெர்ரி சென்றுள்ள வேளையில், நைஜீரியா ராணுவம் நடத்திய வான்தாக்குதல் தகவல்கள் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமீப காலமாக உள்ளூர் படைகளின் ஆதரவுடன் போகோஹரம் இயக்கத்தினரிடம் இருந்து பல பகுதிகளை நைஜீரிய ராணுவம் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.

டாயே என்ற கிராமத்தில் நடத்திய வான்தாக்குதலில்தான் அபுபக்கர் ஷேகாவ் படுகாயம் அடைந்திருப்பதாக நைஜீரிய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.