கார் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி – பலர் காயம்

347 0

201608240834004648_One-dead-dozens-wounded-in-Thai-deep-south-car-bomb_SECVPFதாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்து நாட்டில் இயங்கிவரும் ஒரு சிறுபான்மையினப் பிரிவைச் தீவிரவாதிகள் வெளிநாட்டினரை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள ஓட்டல்கள் மீது இவ்வகையிலான தாக்குதல்களை நடத்துவது அங்கு வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில், தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பட்டானி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மிகவும் சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தாங்கள் வாழும் தாய்லாந்து நாட்டின் தென்பகுதிக்கு சுயாட்சி உரிமை கேட்டு கடந்த நான்காண்டுகளில் இந்த தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு வன்முறை தாக்குதல்களில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.