பிரான்சின் புறநகர்பகுதிகளில் ஒர் நகரமான வில்நெவ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தினதும் தமிழ்ச்சோலையினதும் 19 வது ஆண்டு விழா 21.10.2017 சனிக்கிழமை 13.00 மணிக்கு மிகவும் சிறப்பானதாக தமிழ்ச்சோலை மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது.
தாயமண்ணை நேசித்து அதன் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்காக மாவீரர் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கமும் செய்யப்பட்டது. அகவணக்கத்துடன் வில்நெவ் தமிழ்ச்சங்க தலைவர், செயலாளர், நிர்வாகி உறுப்பினர்கள் ஆசிரியர் மற்றும் முக்கியமானவர்களும் ஏற்றி வைத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை மாணவர்கள் வழங்க வரவேற்புரை இடம்பெற்றது. தமிழ்க்கடவுளாக கருதப்படும் முருகனுக்கு திருப்பரும் குன்றத்தில் என்ற பக்திப்பாடலுடன் மாவீரர் பாடலுக்கான நடனத்தையும், தனிநடனங்களையும் இலக்கியமும் போரும், மண்ணின் மைந்தர்கள் என்ற தலைப்புக்களில் பேச்சுக்களும், ஏர் முனைக்கு நிகர் எதுவும் இல்லை, பாரதியார் பாடல், பனைமரமே பனைமரமே, சிவன்பாடல், கல்வியிலே சிறந்திட வேண்டும், புலிபுலிமாமா வீட்டுக்கு வாங்க போன்ற பாடல்களுக்கு சிறுவர்களின் அபிநய நடனங்களும், ஆங்கிலப்பாடல், தாளலயம், கல்வி, தேசத்துநாயகர்கள் தலைப்புக்களில் கவிதையும், வில்லிசை மற்றும் எழுச்சிப் பாடல்களுக்கான நடனங்களும் மாணவர்களால் வழங்கப்பட்டது. இந்த வருடம் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தேர்வுகளிலும், ஏனைய போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வில் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கூத்து சிந்து நடைக்கூத்து சிறப்பாக மாணவர்களால் வழங்கப்பட்டது. மண்ணினதும் புலத்தினதும் இன்றைய ஓர் நிலையை காலத்திற்கு ஏற்றவகையில் சமூக நாடகமாக மாணவர்கள் வழங்கி மக்களின் கரகோசத்தையும் பாராட்டுதல்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்களும், முக்கிய உறுப்பினர் திரு. மேத்தா அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளரும் தமிழ் ஆசிரியருமாகிய திரு. அகிலன் அவர்களும் மற்றும் தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் மற்றும் தேச விடுதலைச் செயற்பாட்டாளர்கள், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு உரைகளும் ஆற்றியிருந்தனர். வில்நெவ் சென்Nஐhர்ஐ; பிராங்கோ தமிழ்சங்கமும், அதன் பிரதான செயற்பாடான தமிழ்ச்சோலை குழந்தைகளின் தாய் மொழிக்கல்வியிலும், போட்டிகளிலும், தேசத்தில் உள்ள எமது குழந்தைகளின் கல்வி ரீதியாக அவர்களுக்கு வழங்கி வரும் மனிதநேய உதவிகள் பற்றியும், ஆண்டு தோறும் உடல் உள ஆரோக்கியத்திற்கான விளையாட்டுப்போட்டி நடாத்துவதும், கலைநிகழ்வுகள் திருக்குறள் மற்றும் நினைவாற்றல்களுக்கான போட்டிகளில் பங்குபற்றுவது வெற்றியீடியது பிரான்சில் உள்ள 65 தமிழ்ச்சோலைகளில் முதன்மையாக இருக்கின்ற தமிழ்ச்சோலைகளில் வில்நெவ் சென்Nஐhர்ஐ; தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும் இடம்பிடித்து வருகின்றது என்றும் அதற்கு கடந்த காலத்தில் சங்கத்தை உருவாக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சங்கத்தினரையும், ஆசிரியர்களை வாழ்த்தியதோடு தற்போது சங்கத்தை கையேற்றிருக்கு இளையவர்கள் இன்னும் சிறப்பாக சங்கத்தையும் தமிழ்ச்சோலையும் அர்ப்பணிப்போடு தற்போது வழிநடத்தி செல்வதே காரணம் என்று கூறியிருந்தனர். தமிழ்மொழியோடு அந்த மொழி அழியாது ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ எனக்கு மண் வேண்டும். அந்த மண்ணின் விடுதலைக்கா எமது வரலாற்றிலே எம் கண்முண்ணே பல லட்சம் உயிரை கொடுத்திருக்கின்றது. எமது இனம் கொடுத்தும் வருகின்றது எமது தேச விடுதலைக்கான அரசியல் பாதையில் நாம் பலதுன்பங்களையும், இடர்களையும் கண்டு பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அதேவேளையில் எமது தேசத்தை எம் இளையவர்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் அவர்களைச் சரியான பாதையில் வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டியது எல்லோருடைய பொறுப்பு உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது. இதில் மொழி ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட நூலினை ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும் மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி. சுகந்தி அவர்கள் திரு. அகிலன் திரு. மேத்தா அவர்களும் இந்நிகழ்வுகளுக்கு கைகொடுத்த வர்த்தகர்கள் தமிழ் ஆர்வலர்களும் பெற்றுக் கொண்டனர். தமிழ்ச்சோலையின் வளர்ச்சியில் குழந்தைகளின் தாய் மொழிக்கல்வியில் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களான ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரு. அகிலன் அவர்கள் மதிப்பு செய்திருந்தார். நிகழ்வில் முத்தாய்பாய் மாணவிகள் தாமே நெறியாள்கை செய்து வழங்கிய “ விடைகொடு எங்கள் நாடே என்ற உணர்வுப்பாடலும், வரிப்புலிக்கோடுகள் என்றும் வறுமைக்கோடாய் மாறாது ’’ என்ற எம் தேசத்தின் எழுச்சி பாடல்களுக்கும் பாடல் இறுதியில் தமிழீழத்தின் தன்மானத்தமிழன் உலகம் வியக்கும் உன்னத விடுதலைப்போராளி தமிழர்களின் நெஞ்சங்களிலும் தமிழின எதிரியின் நினைவிலும் நிற்கும் எங்கள் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களின் திருவுருவப்படத்தையும் தமிழீழ தேசிய கொடியையும் தாங்கிய போது அரங்கமே கரவொலியாலும், சத்தங்களாலும் சிறிது நேரம் அதிர்ந்தது என்றே கூறமுடிகின்றது. இவற்றையெல்லாம் விருப்பத்தோடு 5 வயதுமுதல் 6 வயதுக்குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக தொடங்கி முடியும் வரை மேடையின் அருகில் சென்று ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது போல பிரான்சு முழுவதும் மட்டுமல் உலகம் முழுவதும் வாழும் தமிழ்மக்கள் தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க வேண்டும் அது அழியவிடாது எமது இன அடையாளத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். நன்றி உரையை செல்வன். ரஞ்சித் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைக்கீதம் பாடப்பட்டு நம்புங்கள் தமிழீழம் உணர்வுப்பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் இரவு 9.00 மணியளவில் ஆண்டுவிழா நிறைவு கண்டது.