இத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது

324 0

201608240845284538_Strong-6-2-quake-hits-central-Italy_SECVPFஇத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.இத்தாலி நாட்டில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெருகியா மாகாணத்தின் அமைந்துள்ள நார்சியா நகரின் தென்கிழக்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியானது இங்கிருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரோம் நகரம் வரையில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தால் நார்சியா, அர்குவாடா, அக்குமோலி மற்றும் அமாட்ரைஸ் நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், பீதியடைந்த மக்கள் தங்களது வீடுகளைவிட்டு திறந்தவெளிகளை தேடி ஓடியதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான உயிர் மற்றும் உடைமை இழப்பு தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.