வரலாற்று நெடுகிலும் நாடு செல்ல வேண்டிய பாதையை சரிசெய்து கொடுத்தது மகா சங்கத்தினரே எனவும் தற்போதைய அரசாங்கம் மகா சங்கத்தினருடன் அகௌரவமான முறையில் நடந்துகொள்கின்றது எனவும் கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று (22) தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே தேரர் இதனைக் கூறியுள்ளார்.
இருந்த கருமம் போதாது என்று மக்கள் இன்னொரு கருமமாக இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். தற்பொழுது தேர்ந்தெடுத்த கருமம் இருந்த கருமத்தை விட மோசமாகவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஏதாவதொரு சூத்திரத்தை வைத்து தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. மக்கள் தற்பொழுது மாட்டியுள்ள அரசாங்கத்திலிருந்து விடுபடுவதற்கு சந்தர்ப்பத்தைப் பார்த்துள்ளனர்.
நாட்டின் தலைவர்கள் யார் யாரோ பின்னால் சென்று அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், அவர்கள் அது தங்களுக்கு புன்னியத்துக்காக கிடைத்த ஒன்று என்று நினைப்பதில்லை. இத்தகையவர்கள், ஒரு புறத்தில் வங்கியை நாஷமாக்குகின்றனர். மறுபுறம் கல்வியையும் நாஷமாக்கும் வரை பார்த்துள்ளனர் எனவும் தேரர் கூறியுள்ளார்.