கடந்த அரசாங்கத்தில் ஒன்றரைக் கோடி ரூபா யானையை 26 கோடிக்கு கொள்வனவு

264 0

திறந்த சந்தையில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமாகவுள்ள நிலையில், மியன்மாரிலிருந்து 26 கோடி ரூபா கொடுத்து யானையொன்றை தலதா மாளிகைக்கு கொள்வனவு செய்துள்ளதாகவும், இதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தனியாள் விசாரணை ஆணைக்குழு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த யானை தலதா மாளிகைக்கு மியன்மாரிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்றுள்ள மோசடிகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாணைக்குழு கேட்டுள்ளது.

Leave a comment