அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி வருகிறது !-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

355 0

அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று நேற்று  காலை புதுக்குடியிருப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எந்த பிரச்சினையை இதுவரை தீர்த்து வைத்துள்ளார்கள் என இதன்போது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முயற்சியை தாண்டி போராட்டங்களின் மூலமே மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை மீட்டு வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுமாத்திரமன்றி ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அரசியல் யாப்பு தொடர்பிலான விளக்க கருத்துக்களை வழங்கினர்.

இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்

Leave a comment