ஜே.ஆர். ஐ விடவும் அடக்குமுறை ஆட்சியையே இந்த அரசாங்கம் நடத்துகிறது- மஹிந்த

239 0

ஜே.ஆர். மற்றும் பிரேமதாச நடத்திய ஆட்சியை விடவும் மோசமான ஒரு அடக்குமுறை ஆட்சியையே இந்த நல்லாட்சி அரசாங்கம் நடாத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தனவோ, பிரேமதாசவோ, பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்ததில்லை. நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவற்றை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

அம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு நேற்று (21)  தங்காலை சிறைக்குச் சென்ற வேளை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வாக்குரிமையைப் பறித்துக்கொண்டு, மறுபுறம் இதுபோன்ற அடிப்படை உரிமைகளைக் கூடப் பறித்துக்கொண்டு கல்வீசுவது யார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment