வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறைமையிலான ஆட்சியொன்றை அமைத்துத் தருமாறும் இலங்கை இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறும் கோரி ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரொய்ப் இடம் மகஜர் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்புக் குழுவினால் இந்த மகஜர் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையில் வைத்து ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் கலந்துரையாடியுள்ள இவ்வமைப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 6 பக்கம் கொண்ட மகஜரை ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.