கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

343 0

வவுனியா – குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 2 பேருடன் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் போது இக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்து குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது 56 வயதுடைய யங்கராவூர் – வவுனியா பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment