உத்தேச அரசியல் யாப்பு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பாக இருக்குமாயின் அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதன் பின்னரேயே மக்களுக்கான ஒரு விடயம் அறிமுகம் செய்யப்படுகின்றது. எந்தவொரு விடயமும் மக்களுக்கோ நாட்டுக்கோ பாதிப்பு எனக் கண்டால் அதற்கு தமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது எனவும் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.