யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபா செலவில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு மாடிக் கட்டிடமாக அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைந்தியசாலையாக திகழும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்கூட பக்கவாநங்களால் பாதிக்கப்படுபவர்களிற்கான நவீன சிகிச்சைக்கூடம் இல்லை எனச் சுட்டிக்காட்ணப்பட்டது. இதனால் போதனா வைத்தியசாலை வளாகத்தில் 700 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகள் கொண்ட ஓர் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் 6 அடுக்கு மாடிக் கட்டிடமாக அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் புதிய கட்டத்தின் 6 அடுக்கு மாடிகளில் இரண்டு அடுக்கு மாடிகளில் இவர்களிற்கான விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதோடு ஓர் மாடியில் அதற்கான வசதி வாய்ப்புக்கள் பயிற்சிக் கூடங்களும் அமையும் எஞ்சிய 3 மாடிகளில் ஏனைய விடுதிகளிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த திட்டமானது 2018ல் ஆரம்பிக்கப்பட்டு 2018 மற்றும் 2019களில் அவற்றின் பணிகள் இடம்பெறும். அதன் பிற்பாடு அனைத்துப் படிகளும் பூர்த்தி செய்யப்பட்டு முழுமையானதன் பின்னர் 2020ம் ஆண்டில் இருந்தே குறித்த விடுதியினை இயக்க முடியும். என்றார்.-