முல்லைத்தீவு தண்ணீறூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர்யுவதிகளுக்கு இன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
அகில இலங்கை இந்துமா மன்றத்தினருடன் இனைந்து லண்டன் கிளை சைவ முன்னேற்ற சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.
சைவ முன்னேற்ற சங்கத்தினரின் 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில்முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்த எழு யுவதிகளின் வாழ்வில் ஒளிவீசியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருமண பந்தத்தில் இனைந்து கொண்ட தம்பதியினரை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அகில இலங்கை இந்துமா மன்றத்தின் பிரதம குருக்கள் உள்ளிட்டோர் ஆசிர்வாதித்துள்ளதுடன் அவர்களின் வாழ்வு வாழம் பெற லண்டன் கிளை சைவ முன்னேற்ற சங்கத்தினர் மேலும் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது