தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

258 0

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தொற்றாநோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல் வேலைத்திட்டமானது இன்று காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்ல வளாகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 75 இளைஞர்யுவதிகளை உள்ளடக்கிய பயிற்சிதிட்டமானது இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பயிற்சிபெறும் இளைஞர்கள் தமது கிராமங்களில் சென்று கிராம மக்களுக்கான தொற்றா நோய்தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளார்கள்.

இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன்,மருத்துவர் சத்தியறூபன் சூரியா, புங்குடுதீவு பங்குத்தந்தை ஜெபஜீபன்,தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி. சறோஜா குகனேசதாசன்,மற்றும் பிரதேச இளைஞர்சேவை அதிகாரிகள் இளைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நாட்டின் எதிர்கால தூண்களாக விளங்குகின்ற இளைஞர்கள் ஏனையவிடயங்கள் போன்று  அரசியலில் தெளிவுபெற்று ஜனநாயக வழியில் இடம்பெறும் அனைத்து விடயங்களிலும்   பங்களிப்பு செய்யவேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment