பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
சேருநுவர பிரதேச, காவன்திஸ்ஸபுரயில் உள்ள கங்கை ஒன்றில் நேற்றைய தினம், குறித்த பெண் நீராடச் சென்றுள்ள போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சடலம் சேருநுவர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து, கவாற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.