அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று காலை பதினொருமணியளவில் புதுக்குடியிருப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி கிந்துயன் தலைமையில் நடைபெற்றது
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அரசியல் யாப்பு தொடர்பிலான விளக்க கருத்துக்களை வழங்கினர்
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்