அரம்பேபொல ரத்னசார தேரருக்கு விளக்கமறியல்

265 0

நேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அரம்பேபொல ரத்னசார தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருப்பதாக கூறியுள்ள பொலிஸார் அது தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

முன்னதாக சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரம்பேபொல ரத்னசார தேரரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஆஜராகியிருக்கவில்லை என்பது கூறத்தக்கது.

Leave a comment