வவுனியாவில் ஒருவர் கொலை

285 0

வவுனியா குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு பேருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் மற்றொருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, யங்கராவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment