முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் வருடத்தில் இருந்து ஆங்கில பாடப்புத்தகமொன்றை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை பெற்றுக்கொடுப்பது இதன் நோக்கமாகும் என நேற்று கொழும்பில் இ டம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
அதேபோல் , கல்வி துறையில் உள்ள கட்டமைப்பில் பல மாற்றங்கள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.