வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!

273 0
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத் தலைவர் கிறிஸ்னமேன்ன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் உரிய தீர்வை பெற்று தருவதாக ஐனாதிபதி கூறியிருக்கும் நிலையில் தீர்வு கிடைக்காவிடின் மாணவர்களது போராட்டம் வேறு வேறு வடிவங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றார்.
மாணவர்கள் முன்னெடுக்கும் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் முதல் தொடர்ந்து நடைபெறும் அனைத்துப் போராட்டங்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினரும் பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் ஒன்றியத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a comment