ரஷிய அதிபர் பதவிக்கு புதினை எதிர்த்து போட்டியிடும் பெண் டி.வி. தொகுப்பாளர்

382 0

ரஷிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இத்தேர்தலில் விளாடிமிர் புதினை எதிர்த்து பெண் டி.வி. தொகுப்பாளர் போட்டியிடுகிறார்.

ரஷிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நடைபெறுகிறது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி போட்டியிட முடிவு செய்தார். ஆனால் முறைகேடு வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதி பெறாத நிலையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு 20 நாள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

எனவே, எதிர்க்கட்சி சார்பில் டெலிவி‌ஷன் பெண் தொகுப்பாளர் க்சேனியா சோப் சாக் (35). போட்டியிடுகிறார். அவர் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கின் முதல் மேயர் அன்டோலி சோப்சாக்கின் மகள் ஆவார்.இவர் புதினுக்கு எதிராக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளார். இவரை டுவிட்டரில் 16 லட்சத்துக்கு 60 ஆயிரம் பேரும், இன்ஸ்டாகிராமில் 52 லட்சம் பேரும் பின் தொடருகின்றனர்.

இவர் தேர்தலில் போட்டியிடுவதை அதிபரின் கிரம்ளின் மாளிகை வரவேற்றுள்ளது. அதே நேரம் சோப்சாக் போட்டியிடுவது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி விடும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

க்சோனியா சோப்சாக் கூறும் போது எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கினால் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகி விடுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment