இத்தாலி மேற்பிராந்தியத்தில் தியாகதீபம் திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு

24900 0

இத்தாலி மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகள் இணைந்து பொலோனியா மாநகரில் 15.10.17 அன்று நடாத்திய தமிழ் எங்கள் மூச்சு தேசியம் எம் உயிர் எனும் இந்நிகழ்வு தியாகதீபம் திலீபன்,லெப்.கேணல் குமரப்பா,லெப்.கேணல் புலேந்தி முதல் பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி ,கேணல் சங்கர் ஆகியோருக்கான வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றல்,அகவணக்கம், ஈகைச்சுடரேற்றல் மங்களவிளக்கேற்றல் நிகழ்வுகளைத்தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களால் பாடசாலை கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் இயற்றமிழ் நிகழ்வுகள், வணக்க நடனங்கள்,மற்றும் செஞ்சோலை,பொங்குதமிழ் இலங்கை தீவில் வெற்றியளிக்காத தீர்வுப்பொதிகள் போன்ற ஈழத்தமிழரின் வரலாற்று நிகழ்வுகளின் கலைவடிவங்களும் இடம்பெற்றன மாணவர்களின் வரலாற்றறிவை வளர்க்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட தமிழ், தாயகம் சார் அறிவுத்திறன் நேரடி ஒளியூடக நிகழ்வு பலராலும் பாரட்டப்பட்டது.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கான மற்றும் வளர்நிலை 12 வரை கற்றுத்தேறிய மாணவர்களுக்குமான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இத்தாலி மேற்பிராந்திய நகரங்களான பொலோனியா,ரெச்சியொ எமிலியா ,மாந்தோவா மிலானோ,யெனோவா,பியல்லா மற்றும் ஐந்நூறு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள நாப்போலி நகரங்களில் இருந்து நாநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஆகக் கூடியது ஐம்பது வரையிலான மாணவர்களே தமிழ்க்கல்வி பயிலும் இத்தாலி மேற்பிராந்திய தமிழ்ச்சோலைகளிலிருந்து நூற்றியெண்பதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்ததது இதுவே முதல் தடவையாகும்.

3000 உட்ப்பட்ட ஈழத்தமிழ் மக்களே சிதறி வாழும் இத்தாலி மேற்பிராந்தியத்தில் இன்றைய சூழலில் தமிழுக்காகவும் தேசியத்திற்காகவும் இவ்வாறு மக்களும் மாணவர்களும் புலம்பெயர்ந்த மண்ணில் ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கதாகும் .இத்தாலி மேற்பிராந்திய கல்விச்சேவைப்பொறுப்பாளரின் நன்றியுரையுடன் மாலை ஏழு ணியளவில் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave a comment