மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ரயன் ஜெயலத்தை இன்று முன்னிலைப்படுத்தியப்போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
கடந்த ஜீன் மாதம் 21ஆம் திகதி, சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்று ரயன் ஜெயலத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.