மத்திய அதிவேக பாதை நிர்மாணிப்பதில் ஒப்பந்தம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் தற்போழு நடைபெறு வருகின்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கும் செயற்பாடு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதவும், இதன்மூலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, குறித்த நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்தி பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் மூலம் குறித்த செயன்முறை விசாரணை செய்யப்படவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கதெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.