இலங்கையில் உள்ள தொற்றா நோய்களில் மூன்றில் ஒரு பகுதியை 2020ஆம் ஆண்டளவில்
கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புகையிலை மூலமாக நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்தைக் கருத்திற்கொள்ளாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்
மேலும் தொற்றா நோய்களின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் உயிரிழப்பதாகவும்,இதனால் உயிர்களைப் பாதுகாக்கும் முக்கிய நோக்கத்துடன் எந்தத் தயக்கமுமின்றி புகையிலைக்கான வரியை 90 சதவீதத்தினால் அதிகரித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஜேர்மன் தலைநகரான பேரலினில் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடத்திய மாநாட்டில் கலந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.