அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் ஆறு நாடுகளின் ஒன்பது போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இந்த விஜயங்களின்போது இலங்கை கடற்படையுடன் பல்வேறு கூட்டு ஆயுதப்பயிற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அண்மைக்காலமாக இலங்கை நோக்கிய எந்த விஜயமும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரையிலான காலப்படுதியில் ஆறு நாடுகளை சேர்ந்த ஒன்பது போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்தோனேசிய கடற்படையின் போர்க்கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றும் 26ஆம் திகதி தென்கொரியாவின் இரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை வரும்.
நவம்பர் மாதம் 2ஆம் திகதி இந்தியாவின் இரண்டு போர்க்கப்பல்களும், நவம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேசியாவின் போர்க்கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி சீன போர்க்கப்பல் ஒன்றும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றன.
குறித்த கப்பல்கள் வெவ்வேறு காலத்தில் விஜயம் செய்கின்ற நிலையில் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு ஆயுத பயிற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.