தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியிலுள்ள அம்பன்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் எமது தலைவிதியை முற்றுமுழுதாகத் தீர்மானிக்கும் வகையில் எம்மை ஏமாற்றி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
நாங்களாக விரும்பி எமது பிரதேசத்தில் வேறுயாரும் ஆளலாம் என நாங்களாக விரும்பி கைவிட்ட பின்பு கவலைப்பட்டு எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை.
போரினால் தமிழ் மக்களின் அரசியல் தோற்கவில்லை எனவும் தற்போது தான் தோற்றிருப்பதாகவும் தெரிவித்த அவர் எப்போது எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் கைவிடுகின்றோமோ அப்போது தான் நாங்கள் தோற்றுவிட்ட இனமாக மாறுவோம். எனவும் சுட்டிக்காட்டினார்