பொலிஸாரை அச்சறுத்திய வித்தியா கொலை குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பரபரப்பு

354 0

vithya_case_002வித்தியா கொலை குற்றவாளிகளை கைது செய்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபியை நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்து குற்றவாளிகள் சைகைமூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடாத்தப்பட்டு வருகின்றது.
இருப்பினும் இவ்வழக்கின் முதல் 7 குற்றவாளிகளையும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்திருந்த கோபி என்னும் தமிழ் பொலிசே அதிரடியாக புங்குடுதீவிற்குள் மக்களோடு மக்களாக நுழைந்து கைது செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காரணத்தினால் அவருடைய பாதுகாப்பு கருத்தி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
மேலும் வித்தியா கொலை குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தங்களை கைது செய்த கோபி என்னும் பொலிஸாரை கொலை செய்வோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை செய்திருந்தனர்.
இந்நிலையில் வித்தியா கொலை வழக்க இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேறு ஒரு வழக்கு விசாரணைகளின் சாட்சியாக உள்ள குறித்த பொலிஸ் அதிகாரியான கோபி நீதிமன்றுக்கு வருகைதந்திருந்தார்.
இதன் போது மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்த தங்களை கைது செய்த பொலிஸ் அதிகாரியான கோபியை பார்த்து முறைத்தவாறே குற்றவாளி கூண்டில் நின்றிருந்தனர்.
வழக்கு முடிந்து குற்றவாளி கூண்டில் இருந்து இறங்கி செல்லும் போதும் அவர்கள் கோபியை பார்தவாறு வாய்க்குள் ஏதே முனுமுனுத்துக் கொண்டு சென்றிருந்தனர்.
இருந்த போதும் வித்தியா கொலை குற்றவாளிகள் நீதிமன்ற வளாத்திற்கு வெளியில் அழைத்து வருவதற்கு முன்னரே பொலிஸ் அதிகாரி கோபி என்பவர் தான் சார்ந்த வழக்கு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு நீதிமன்றத்தினை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்.