உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ். இங்கு நேற்று இரவு சாலையோரமாக பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் சாலையோரமாக நடந்து சென்ற மக்கள் மீது திடீரென வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். காவலில் வைத்துள்ள கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலங்களில் லண்டன், பெர்லின், நீஸ், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் வேன்கள், கார்கள் மற்றும் லாரிகளை கொண்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.