இலங்கையின் தென் கடற்பகுதியில் நேற்றையதினம் மர்மமான முறையில் மிகுந்த பிரகாசமான ஒளியும், அதிக சத்தமும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு 8.45 முதல் 9.00 மணி வரையில் இந்த சத்தம் ஒளியும் ஏற்பட்டுள்ளது.
இதனை காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் தெனியாய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானித்ததாகவும் கூறப்படுகிறது.
தென் கடற்பரப்புக்கு அருகில் வாழ்கின்ற மக்கள் வானில் இருந்து மர்மமான ஒளி ஒன்று வீழ்வதை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அனர்த்த முகாமைத்து மத்திய நிலையமும் உறுதி செய்துள்ளது.
அத்துடன் காலி மாத்தறை பகுதியில் வசிக்கும் மக்கள் சிறிய அளவான நில அதிர்வையும் உணர்ந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் விளக்கமளித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, குறித்த ஒளியும் சத்தமும், எரிகற்களின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.