தலா வருமானத்தை உயர்த்த திட்டம்

357 0

எதிர்வரும் மூன்று வருடங்களில் தலா வருமானம் 5000 டொலர்களாக உயரும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி 2025ஆம் ஆண்டு வரையில் திட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பல சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டுள்ள பிரதியமைச்சர், அரசாங்கம் கடன் சுமையை சமாளிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின்படி தலா வருமானத்தை 5000 டொலர்களாக உயர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

அத்துடன் 430,000 தொழில்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக ஹர்ச டி சில்வா கூறியுள்ளார்.

Leave a comment