எல்லை நிர்ணய யோசனைகளை முன்வைக்க நவம்பர் 2 வரை அவகாசம்

349 0

மாகாண சபைகளுக்காக நிர்வாக மாவட்டங்களுக்கு கீழ் தெரிவு செய்யப்பட்டவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைகளுக்காக தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான யோசனை மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2017 இல. 17 என்ற மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்தின் படி தேர்தல் வலயங்கள் உருவாக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி மாகாண சபைகளுக்காக குறித்த நிர்வாக மாவட்டத்திற்கு கீழ் தெரிவு செய்யப்படவுள்ள முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் உத்தேச எண்ணிக்கையில் தெரிவு செய்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காக நொவெம்பர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட வேண்டும் என எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment