திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தரொருவர் இன்று (18) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மொறவெவ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை – கிபிஸ்ஸ-நாகல்வெவ பகுதியைச்சேர்ந்த 026816 எனும் இலக்கமுடைய ஹபுகொட கலகாவகெதர நோமன் ஜெயரெட்ண (33வயது) தெரியவருகின்றது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து மொறவெவ விமானப்படை தளத்திற்கு கட்டிட நிர்மானப்பணிக்காக வந்த 15 பேர் இன்றைய தினம் விடுமுறை காரணமாக குளத்திற்கு நீராடச்சென்றிருந்த போதே நீரில் மூழ்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மொறவெவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.