நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகள்

336 0

உள்ளூராட்சி மன்ற புதிய சீர்திருத்தத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தாக அரசியல் கட்சிகளுடன் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

இது சம்பந்தமான யோசனை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களும் இதற்கு உடன்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு காலம் தேவை என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

நுவரெலிய மற்றும் அம்பேகமுவ பிரதேச சபைகளின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் ஒரு பிரதேச சபையில் 02 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவாகியிருப்பதால், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

Leave a comment