சாவகச்சேரி டச்சு வீதி சங்கத்தானை பகுதியில் மருத்துவர் கடவுள் அம்பிகைபாலன் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு ஒரு மணியளவில் திருடர்கள் உட்புகுந்தனர்.
இதன்போது இரண்டு மாணவிகளும் தாயாரும் குறித்த நேரத்தில் இருந்துள்ளனர்.வீட்டார் ஓலமிட்டுக் கத்தியதால் தாம் கொண்டு வந்த வாளால் பெண்மணியொருவரை தாக்கி விட்டு அரைகுறையில் தமது முயற்சியை கைவிட்டு கிடைத்த நகைகளுடன் தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் உடனடியாகவே அவசர சேவை இலக்கத்துக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதை அடுத்து சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.