முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன நேரடி அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் நேரடி அரசியலில் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை (19) நடைபெறவுள்ளது.