மாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

258 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவின் பழைய கொலனி பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகளால் பொதுமக்களது பயன்தரு மரங்கள் வேலிகள் என்பன அழிக்கப்பட்டுள்ளது

தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோருகின்றனர்

இன்று அதிகாலை குறித்த பகுதிக்கு வந்த  யானை மக்களின் பல வருடங்கள் நிரம்பிய தென்னை மரங்கள் புதிதாக நடப்பட்ட தென்னைகள் வாழை மரங்கள் என பலவற்றை நாசம் செய்துள்ளதோடு வேலிகளையும் சேதப்படுத்தி சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள்

யுத்தகாலப்பகுதிக்கு முன்னர் இங்கு யானைகளின் அட்டகாசம் இல்லையெனவும் யுத்தத்தின் பின்னர் வளப்பு யானைகள் எமது பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வரட்சி காரணமாக விவசாயமும் அழிந்த நிலையில் மீதமிருக்கும் வான்பயிர்களினையும் யானை அழிப்பதாகவும் உடனடியாக எமது பகுதிக்கு யானை வேலி அமைத்து தந்து எமது வாழ்வாதாரத்தை உயர்த்த அதிகாரிகள் முன்வருமாறும் கோருகின்றனர்.

Leave a comment