பகல் முழுவதும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பதினொரு வயது நிரம்பிய சிறுவன் இரவு வேளை திடீரென மூர்ச்சையற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் கிளிநொச்சி முழங்காவில் வைத்தியசாலை வீதி இராசபுரத்தில் கடந்த 16 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.
மரணமானவர் கிட்டினசாமி கோவரசன் (வயது 11) என்னும் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 6இல் கல்வி பயிலும் மாணவராவார்.
சம்பவ தினம் ஞாயிறு விடுமுறை தினமானதால் வீட்டின் முன்பாக உள்ள காணியில் தனது நண்பர்களான சிறுவர்களுடன் விளையாடியவர் இரவு படுக்கைக்குச் சென்றவர் திடீரென நெஞ்சு வலிப்பதாகவும் கூறி வாந்தி எடுத்தநிலையில் மயக்கமடைய முழங்-காவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்-கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு முன்பே மரணமாகியுள்ளதாக முழங்காவில் பொலி-ஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவனின் மரணம் தொடர்பில் மேல-திக விசாரணைகள் இடம்பெற்று வரு-கின்றமை குறிப்பிடத்தக்கது.