கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த பல்வேறு மோசடிகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவையும் சட்டத்தின் முன் கொண்டு வருவோம் என என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைட்டம் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடந்த மோசடி குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்காலத்தில் சட்டத்தின் முன் கொண்டுவருவோம்.
அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னேற்றகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அதியுச்ச பெரும்பான்மையை பெற முடியாது. ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஆட்சி அமைக்கும் வகையிலேயே தேர்தல் முறைமை உருவாக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.