பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

248 0

சர்ச்சைக்குரிய பினை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு அவ்வாணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பிலான சாட்சிகள் திரட்டும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையில் இவ்வாணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 27ம் திகதியுடன் நிறைவடைவதாகவும் இறுதியறிக்கையினை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்குக் கால தாமதம் ஏற்படுவதனால் அவ்வாணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவ்வாணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியான கே.டீ.சித்திரசிறி தலைமையில் 03 மாத காலத்திற்காக நியமிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் மூன்று மாதங்கள் வீதம் இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment