உமா ஓயா பாதிப்பு பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டம்

266 0

உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment