கஞ்சா கலந்த மதன மோதன லேகியத்துடன் சந்தேகநபர் கைது

246 0

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புஹாரியடி சந்தியில் கஞ்சா கலந்த மதன மோதன லேகியத்துடன் இன்று (18) காலை சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை சோதனையிட்ட போது ஒரு பெட்டியில் 25 துண்டுகள் லேகியம் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு துண்டின் விலை 150 ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-அடப்பனா வெட்டை பகுதியைச்சேர்ந்த சின்னத்தம்பி என்றழைக்கப்படும் அபுதாலிப் தௌபீக் (45வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a comment