எனக்கு கட்டளையிடக்கூடியவர்களின் பணிப்பிலும் அனுமதியுடனுமே நிகழ்வில் கலந்து கொண்டேன் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி வருகைதந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் அவரது நிகழ்வுகளை புறக்கணித்திருந்தனர் எனினும் வடமாகான விவசாய அமைச்சர் உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் இதுதொடர்பில் பவேருபட்ட கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் இதுதொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்
எங்களுடைய விவசாய அமைச்சுடன் இணைந்து அவர்கள் யாழ்ப்பாணத்திலே பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்தவகையிலே குறித்த இந்த நிகழ்வுக்கு எங்களுடைய அழைப்பை ஏற்று ஜனாதிபதி அவர்கள் வருகைதந்திருக்கின்றார்கள்.
அந்தவகையிலே அந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் என்றவகையில் நானும் முதலமைச்சர் அவர்களும் விடுத்த அழைப்பிலேயே ஜனாதிபதி அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது அந்த நிகழ்வு நடக்கின்ற காலப்பகுதியிலே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டம் நடைபெற்றது.
ஆகவே இதுதொடர்பாக நான் முதலமைச்சரிடம் சென்று இந்தநிகழ்வில் கலந்துகொள்வாதா என கேட்டபோது ஜனாதிபதி அவர்கள் எங்களுடைய அழைப்பிலேயே வருகிறார் எனவே அந்த நிகழ்வில் கட்டாயமாக கலந்துகொள்ளுமாறு தெரிவித்தார் அவரது பணிப்பிலேயே நான் கலந்துகொண்டேன்.
அதுமாத்திரமல்ல இதுதொடர்பில் மாகாண சபை என்ற அடிப்படையில் அவைத்தலைவர் தெரிவித்தார் மாகாண சபை உறுப்பினர்கள் நாங்கள் இந்த நிகழ்வை புறக்கனிக்கிறோம் இருப்பினும் அது உங்களுக்கு விதிவிலக்கு காரணம் நீங்கள் தலைமையேற்று நடத்துகின்ற நிகழ்வு அதில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்பதால் அவர்களுடைய கருத்துக்களையும் ஏற்றுகொண்டேன்.
நிச்சயமாக இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல எனக்கு யார் யார் கட்டளையிட வேண்டுமோ அவர்களது வேண்டுகோளை ஏற்று எடுத்த முடிவே நிச்சயமாக இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல என்றார்
அத்தோடு அங்கு கலந்துகொண்ட போது ஜனாதிபதியிடம் என்ன விடயங்களை கலந்துரையாடிநீர்கள் என்று கேட்டபோது
யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கான விதை உருளைக்கிழங்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இன்று மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்ற புகையிலை உற்பத்தி தொடர்பில் புகையிலை ஒழிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை அடிப்படையில் மிகப்பெரும் பணப்பயிராக இருக்கின்ற இதனை நிறுத்துவதால் வாழ்வாதார பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்ததற்கமைய இதுதொடர்பில் மீண்டும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக ஜாதிபதி தெரிவித்ததாகவும் மற்றும் வங்கிகளின் கடன் பெற்ற விவசாயிகள் கடந்த கால வரட்சி காரணமாக இதனை செலுத்த முடியாது உள்ளதாகவும் தெரிவித்ததற்கு வங்கிகளுடன் கதைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மற்றும் அறுவடை காலங்களில் இறக்குமதி செய்யப்படுவதால் உற்பத்தி பொருட்களை நியாய விலையில் விற்க முடியாதுள்ளதாகவும் அதற்க்கு குறித்த காலப்பகுதியில் இறக்குமதியை நிறுத்துமாறும் கோரிகை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்