மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் படி, நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக மேலும் நான்கு பிரதேச சபைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பகமுவ பிரதேச சபை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கொலியா ஆகிய பிரதேச சபைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதுபோல், கொட்டகலை பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா, மற்றும் அகரபத்தனை பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.