மோட்டார் சைக்கிள் – சைக்கிள் மோதிக் கொண்ட வீதி விபத்தில் வயோதிபர் பலி

272 0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு 17.10.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்து மரணம் நிகழ்ந்தது.

மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியரான இம்மானுவெல் சந்திரகுமார் (வயது 65) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராகும்.

படுகாயமடைந்த அவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment