குளிரினால் நடுங்கிய வயோதிபப் பெண் மரணம்

475 0

ஏறாவூர் – மயிலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு நிலவிய குளிர் காரணமாக வயோதிபப் பெண்ணொருவர் மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் குளிரான காலநிலையுடன் மழை பெய்துகொண்டிருந்தது.

இந்தக் குளிருக்குத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியை அண்டிய வீட்டில் வசித்து வந்த சதாசிவம் – பாக்கியம் தவசி (வயது 69) என்ற பெண் அசைவற்றுப் போயுள்ளார்.

நிலைமையை அறிந்து கொண்ட உறவினர்கள் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அவர் எற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டின் பருவ மழை துவக்க காலத்தில் குளிர் தாங்க முடியாமல் இடம்பெற்ற முதலாவது மரணம் இதுவென்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment