மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
412 கிலோமீற்றரான இந்த நீண்டதூர பேருந்து சேவையை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் ஆரம்பித்துவைத்தார்.
இந்தப் பேருந்து சேவையானது, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மக்களின் நலன் கருதியும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினதும், மட்டக்களப்பு இசை நடன கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி மட்டக்களப்பிலிருந்து இரவு 8.20 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து இரவு 9.30 மணிக்கும் இச்சேவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம் கிருஸ்ணராஜா, பிரதான பிராந்திய முகாமையாளர் எ .எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள் சாரதிகள் நடத்துனர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.